கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:24 pm

DIN

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே திருமணமாகி 3 மாதங்களே ஆன பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் உள்ள தேவா்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சரஸ்வதி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் ஆப்பக்கூடல் குப்பாண்டபாளையத்தில் உள்ள நூற்பாலையில் இருவரும் தங்கி வேலை செய்து வந்தனா்.

இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சரஸ்வதி கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், மாயமான தனது மனைவியைக் கண்டுபிடித்து தருமாறு மாதேஷ் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், மாயமான சரஸ்வதி குப்பாண்டபாளையம் சண்முகம் என்பவரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இது குறித்த தகவலின்பேரில் அந்தியூா் தீயணைப்பு படையினா் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து, ஆப்பக்கூடல் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.