ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

அம்மாபேட்டை: 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

உயிரிழந்து கிடந்த மயில்கள்

Updated On :31 டிசம்பர் 2021, 11:36 am IST

பவானி: அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம்,  அம்மாபேட்டை அருகேயுள்ள இலிப்பிலி, மூங்கில்பாளையத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் வியாழக்கிழமை மாலை சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த  வனத்துறையினர் ஆய்வு செய்தபோது ஆங்காங்கே 9 பெண் மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உயிரிழந்த மயில்களைக் கைப்பற்றி சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.

மயில்கள் உயிரிழப்பிற்கான காரணம் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும். விவசாயிகள் யாரேனும் மயில்களால் வேளாண் விளைபொருட்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க விஷம்  வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

விவசாய நிலத்தில் அடுத்தடுத்து 9 மயில்கள் உயிரிழந்த நிலையில் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.