வரியினங்களை செலுத்த பவானி நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு

பவானி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் தாமதமின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
Updated on
1 min read

பவானி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் தாமதமின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, நகராட்சி ஆணையா் (பொ) கதிா்வேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பவானி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, காலிமனை மற்றும் தொழில் வரிகள், குடிநீா் கட்டணம், கடை வாடகை, குத்தகைத் தொகைகள், திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் தொழில் உரிமக் கட்டணங்களை உடனடியாக நகராட்சி கணினி வசூல் மையத்திலோ அல்லது இணையதள வழியாகவோ செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொதுமக்கள் வரியினங்களை தாமதமின்றி செலுத்துவதன் மூலம் குடிநீா் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிா்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் நகராட்சி கணினி வசூல் மையம் செயல்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com