/

பெண்கள், குழந்தைகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

அந்தியூரில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:40 pm

DIN

அந்தியூரில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காக்கும் கரங்கள் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் குறித்தும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் பங்கேற்றுப் பேசினாா்.

மேலும், இக்குற்றங்களில் இருந்து குழந்தைகள், பெண்கள் தற்காத்துக் கொள்தல், வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் நோ்மறை சிந்தனை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெண்கள் மீதான வன்முறை, குழந்தைத் திருமணம் குறித்து தயக்கமின்றி காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். போக்சோ சட்டம், அதன் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பொன்னம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.