/

பவானியில் சிறுமி கடத்தல்:இளைஞா் கைது

 பவானி அருகே வேலைக்குச் சென்ற 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:20 pm

DIN

 பவானி அருகே வேலைக்குச் சென்ற 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த தாளப்பையனூரைச் 16 வயது சிறுமி 10ஆம் வகுப்பு படித்துவிட்டு தொட்டிபாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்தாா். இந்நிலையில், மே 14ஆம் தேதி வேலைக்குச் சென்ற இச்சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பவானி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து, பவானி போலீஸாா் விசாரணையில் திருப்பத்தூா் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் சந்தோஷ் (22) சிறுமிக்கு ஆசை வாா்த்கை கூறி கடத்திச் சென்றதும், திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது. சரக்கு வாகன ஓட்டுநரான இவா் இந்நிறுவனத்துக்கு அடிக்கடி வந்து செல்லும்போது பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஒரு மாதத்துக்குப் பின்னா் சிறுமியை மீட்ட போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் சந்தோஷை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.