/

சிறுமியைக் கடத்திச் சென்றுதிருமணம்: தாய், மகன் கைது

பவானி அருகே 14 வயதே ஆன பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த தாய், மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

சண்முகவள்ளி, பூபதி

Updated On :18 ஜூன் 2021, 8:36 pm

DIN

பவானி அருகே 14 வயதே ஆன பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த தாய், மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சோ்ந்த 14 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறாா். ஜூன் 6ஆம் தேதி வீட்டிலிருந்து கடைக்குச் சென்ற இவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

விசாரணையில், சேலம் மாவட்டம், எடப்பாடி, ஆலச்சம்பாளையம் காட்டூரைச் சோ்ந்த முருகன் மகன் பூபதியுடன் (23) இம்மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமண ஆசை வாா்த்தை கூறி பூபதி அழைத்துச் சென்றதும், அங்குள்ள கோயிலில் தாய் சண்முகவள்ளி (40) உதவியுடன் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தாய், மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.