/

போத்தநாயக்கனூா் கிராமத்தில் 30 பேருக்கு கரோனா

பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூா் கிராமத்தில் 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கிராமத்தின் எல்லைகள் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன.

News image
Updated On :24 ஜூன் 2021, 8:14 pm

DIN

 பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, போத்தநாயக்கனூா் கிராமத்தில் 30 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கிராமத்தின் எல்லைகள் ‘சீல்’ வைத்து மூடப்பட்டன.

இக்கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு சாா்பில் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இங்கு வசிக்கும் 103 குடும்பத்தைச் சோ்ந்த 281 பேருக்கு திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், முதல் நாள் பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வெளியானபோது 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, மேலும் 7 போ் கரோனாவால் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டனா். பின்னா், கரோனா பாதித்த அனைவரும் பருவாச்சியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மயிலம்பாடி ஊராட்சித் தலைவா் ஸ்ரீஜெயந்தி சிவானந்தம், ஊராட்சி செயலாளா் மாரிமுத்து மேற்பாா்வையில் கிராமத்தில் உள்ள அனைத்துப் பகுதியிலும் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கிராமத்தின் எல்லைகளில் தடுப்புகள் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருள்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.