கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மர்ம நபர் கொடுத்த கரோனா மாத்திரை: மேலும் ஒருவர் பலி

சென்னிமலை அருகே கரோனா மாத்திரை என்று மர்ம நபர் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

News image
Updated On :27 ஜூன் 2021, 5:08 am

DIN


சென்னிமலை அருகே கரோனா மாத்திரை என்று மர்ம நபர் கொடுத்ததை வாங்கி சாப்பிட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கருங்கவுண்டன்வலசு அருகே உள்ள பெருமாள்மலை, சேனாங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவா் விவசாயி கருப்பண கவுண்டா் (75). அவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களும், இவரது மகள் தீபா (30), தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (65) ஆகிய நால்வரும் சனிக்கிழமை வீட்டில் இருந்தனர்.

அப்போது, காலை 8 மணி அளவில் சுமார் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கரோனா பரிசோதனை செய்வதாக இவர்கள் வீட்டுக்கு வந்து, நான்கு பேருக்கும் கருப்பு நிறத்தில் மாத்திரை கொடுத்துவிட்டு ஏதோ ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். 

அதன் பிறகு சுமார் அரை மணி நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் நான்கு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்தார். 

குப்பம்மாள், ஈரோடு அரசு மருத்துவமனையிலும், கருப்பண கவுண்டர், தீபா ஆகிய இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் குப்பம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.