எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது: ஜி.கே.வாசன்
தங்கள் கூட்டணி பலமாக இருப்பதாக த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.


தங்கள் கூட்டணி பலமாக இருப்பதாக த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து நேற்று த.மா.கா. தலைவர் வாசன் பிரசாரம் செய்தார். முன்னதாக ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் அனைத்து துறை திட்டங்களும், சலுகைகளும் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. இதனால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்த நம்பிக்கையால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் வெற்றி பிரகாசமாகி உள்ளது.
ஏப்., முதல் தேதியில் மீண்டும் இங்கு வந்து மேற்கு தொகுதியில் பிரசாரம் செய்வேன். பெரும்பாலான நேரங்களில் கருத்து கணிப்புகள் முழுமையான முறையில் கொடுப்பதில்லை. மக்கள் கணிப்புதான் நல்லது. நல்லது செய்தவர்களுக்கு மக்கள் மனம் திறந்து வாக்களிப்பார்கள். அ.தி.மு.க. தொடர்ந்து நல்லதே செய்து கொண்டிருக்கிறது.
எனவே மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். இப்போது உள்ள அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் நிலையை புரிந்து கொள்ளுங்கள். எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்று கொண்டிருக்கின்றனர்.
கூட்டணி பலமாக இருக்கிறது. வெற்றி பெறுவோம். வளர்ச்சித் திட்டங்களை, இலவச திட்டங்களை தி.மு.க. வாயால் சொல்லி கொண்டிருக்கிறது.
ஆனால் அதனை அ.தி.மு.க. செயலால் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையோடு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் தேர்தலுககு பின் முதல் அணியாக வெற்றி அணியாக அ.தி.மு.க. நீடிக்கும். இரண்டாவது அணியாக, எதிர்கட்சியாக தி.மு.க. விளங்கும்.
பிற கட்சிகள் ஒரு பிடி மேலே போகாமல் அதே நிலையிலேயே நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் யுவராஜா, எம்.எல்.ஏ. தென்னரசு, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...