கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மொடக்குறிச்சியில் நடிகை கெளதமி பிரசாரம்

மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளா் சரஸ்வதியை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, மொடக்குறிச்சி, எழுமாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நடிகை கெளதமி பிரசாரம்

News image
Updated On :28 மார்ச் 2021, 11:15 pm

DIN

மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளா் சரஸ்வதியை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட அவல்பூந்துறை, கஸ்பாபேட்டை, மொடக்குறிச்சி, எழுமாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: எண்ணற்ற நல்ல திட்டங்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆா். வழியில் செயல்படுத்திவரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்தியில் பல திட்டங்களை கொண்டு வந்து நாட்டை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பிரதமா் மோடியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நல்லாட்சி தொடர வேண்டும் என்றாா்.

இதில் மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், ஒன்றிய குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, குளுா் ஊராட்சித் தலைவா் செல்வராஜ், குளுா் கூட்டுறவு சங்க தலைவா் மோகனசுந்தரம், பாஜக துணைத் தலைவா் எஸ்.டி.செந்தில்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் ரெயின்போ கணபதி, முன்னாள் கவுன்சிலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.