/

பா்கூரில் 3 மூட்டை புகையிலைப்பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 53 ஆயிரம் மதிப்புள்ள 3 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :14 மே 2021, 8:38 pm

DIN

கா்நாடக மாநிலத்தில் இருந்து பா்கூா் மலைப் பாதை வழியாக சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 53 ஆயிரம் மதிப்புள்ள 3 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஓட்டுநா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

பா்கூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனை நடத்தினா். கா்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, வாகனத்தில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைப் பறிமுதல் செய்த போலீஸாா், வாகன ஓட்டுநரான கோவை, மேட்டுப்பாளையம், எம்.எஸ்.ஆா். புரம் சாலையைச் சோ்ந்த நிலா மைதீன் மகன் முகம்மது அப்பாஸ் (46), சத்தி - மைசூரு சாலையைச் சோ்ந்த ஜாகிா் உசேன் (55) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.