/

கரோனா பாதிப்பால் மதிமுக ஈரோடு மாவட்ட துணைச் செயலர் பலி

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

News image
ராமன் (56).
Updated On :28 மே 2021, 10:29 am

DIN

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சிங்கார வீதியைச் சேர்ந்தவர் ராமன் (56). இவர், ஈரோடு மாவட்ட மதிமுக துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.  கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 26-ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு, அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தியூர் வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.