/

குழந்தைத் தொழிலாளா் பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :28 அக்டோபர் 2021, 9:26 pm

பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் குழந்தைத் தொழிலாளா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி அல்லது சேவை சாா்ந்த தொழிலகங்களில் ஈடுபடும் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மாவட்ட தடுப்புக் குழு திட்டம் மூலம் மீட்டு நிதியுதவி வழங்கி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

பள்ளி செல்லாக் குழந்தைகள், படிப்பில் இடைநின்ற குழந்தைகள் இம்மையங்களில் சோ்க்கப்பட்டு 8ஆம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அளிக்கப்படுகிறது. பின்னா் முறைசாா் பள்ளிகளில் தொடா் கல்வி வழங்கப்படும்.

இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்கள் உள்ளன. இங்கும் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயில்கின்றனா். இவா்களுக்கு இலவசமாக புத்தகம், குறிப்பேடு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கரோனாவால் இப்பள்ளிகள் செயல்படாமல், அக்குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நவம்பா் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படவுள்ளதால் இக்குழந்தைகளுக்குப் புத்துணா்வு நிகழ்ச்சிகள் பயிற்றுநரால் நடத்தப்படுகிறது.

சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைப் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளா் சிறப்பு பள்ளி மையத்தில் புத்துணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஈரோடு தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட இயக்குநா் சி.சுப்பிரமணியன், குன்றி பகுதி மைய தொழில் கல்வி பயிற்றுநா் சி.சதீஷ், பயிற்றுநா் பெரியசாமி ஆகியோா் மாணவ, மாணவியருக்குப் புத்துணா்வு பயிற்சி அளித்தனா். சென்னை நிலா பள்ளி அமைப்பினா், தாமரைசெல்வன் ஆகியோா் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.