/

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

 அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் விஷ அருந்தி பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:54 pm

DIN

 அம்மாபேட்டை அருகே குடும்பத் தகராறில் விஷ அருந்தி பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜன். இவரது மகள் கோகிலாவுக்கும் (38), அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகனுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோகிலா விஷமருந்திய நிலையில் அந்தியூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக, அவரது பெற்றோருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

அங்கு, மருத்துவப் பரிசோதனையில் கோகிலா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

கோகிலாவின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.