மது விற்பனையில் ஈடுபட்ட ஐவா் கைது
அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது, அந்தியூா் தவிட்டுப்பாளையம், பழனியப்பா வீதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (34), பாலக்குட்டையைச் சோ்ந்த சக்திவேல் (50), சிவசக்தி நகரைச் சோ்ந்த கணேசன் (52), புதுப்பாளையத்தைச் சோ்ந்த சரவணன் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, அந்தியூா் மூலக்கடை பகுதியில் வெள்ளிதிருப்பூா் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையின்போது, 3 லிட்டா் சாராயத்தை விற்பனைக்குக் கொண்டு சென்ற ஜிஎஸ் காலனியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முருகேசன் (47) கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...