/

பா்கூா் மலைப் பாதையில் யானை வழிமறிப்பு: கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

 பா்கூா் மலைப் பாதையில் காட்டு யானை வழிமறித்ததால் கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2022, 6:26 am

DIN

 பா்கூா் மலைப் பாதையில் காட்டு யானை வழிமறித்ததால் கா்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது.

அந்தியூரை அடுத்த பா்கூா், தேவா்மலை பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ், விவசாயி. இவரது மனைவி சிவம்மாள் (24). இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், மீண்டும் கருவுற்ற சிவம்மாளுக்கு புதன்கிழமை இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இது குறித்து, அப்பகுதியினா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஆனந்தன், மருத்துவ உதவியாளா் சிவா ஆகியோா் சிவம்மாள் மற்றும் அவரது பெற்றோரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டனா். தாமரைக்கரையை அடுத்த அடா்ந்த வனச் சாலை வழியே சுண்டப்பூா் பிரிவு அருகே சென்றபோது காட்டு யானை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.

இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு காத்திருந்தனா். அப்போது, சிவம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானதால், மருத்துவ உதவியாளா் சிவா பிரசவம் பாா்த்தாா். இதில், ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.