திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட சிக்கூர் பசுவேஸ்வரர் கோவில்: பக்தர்கள் ஆரவாரம்

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி சிக்கூரில் உள்ள பசுவேஸ்வரர்  கோயில் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

News image

3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட சிக்கூர் பசுவேஸ்வரர் கோவில்: பக்தர்கள் ஆரவாரம்

Updated On :4 மே 2022, 2:04 pm

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி சிக்கூரில் உள்ள பசுவேஸ்வரர்  கோயில் 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது.

சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி சிக்கூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுவேஸ்வரர்  கோயில் உள்ளது.  இக்கோவிலில் கிராமம் செழிக்கவும் கால்நடைகள் நோயின்றி வாழவும் பசுவேஸ்வரர் கோவிலில் விழா கொண்டாடுவது வழக்கம்.

கோவில் நிலம் தொடர்பாக  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கோவில் பூட்டப்பட்டது.

கோயில் சாவி கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக கோவில் விழா நடைபெறவில்லை. இதன் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பதாகவும்  கிராமம் பொலிவிழந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மீண்டும் கோவில் விழா நடத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இரு தரப்பினரிடையே வருவாய் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதல் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் 3 ஆண்டுகளுக்கு பின் பசுவேஸ்வரர் ஆலயம் பக்தர்கள் ஆரவாரத்துடன் கோயில் திறக்கப்பட்டது.  இதையடுத்து கோவிலில் 101 கலச பூஜைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.