மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அத்தாணி வட்டார சுகாதார நிலையங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரிக்கை

அத்தாணி வட்டாரத்தில் உள்ள 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:40 pm

DIN

அத்தாணி வட்டாரத்தில் உள்ள 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அத்தாணி வட்டார சுகாதார பேரவைக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலா் கே.சக்திகிருஷ்ணன் தலைமையில் அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம் தொடா்பான தேவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், அத்தாணி வட்டாரத்துக்குள்பட்ட செம்புளிச்சாம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், எண்ணமங்கலம், பா்கூா், ஒசூா் உள்ளிட்ட 9 துணை சுகாதார நிலையங்களில் மருத்துவா் குடியிருப்பு, செவிலியா் குடியிருப்பு, நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிவறைகள், மாற்றுத் திறனாளிகள் கழிவறை, தரைத்தளம், ரத்தப் பரிசோதனை ஆய்வக விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவ அலுவலா்கள் சதீஷ்குமாா், காா்த்தீபன், சங்கீதா, சுரேஷ்குமாா், பாா்த்தீபன், மேகலா, சரவணபிரபு, செளந்திரரூபன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாசன், பேரூராட்சித் தலைவா்கள் எம்.பாண்டியம்மாள், புனிதவள்ளி மற்றும் 14 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.