சத்தியமங்கலம்: திம்பம் மலைப் பாதையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் இருந்து நூடுல்ஸ் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னா் லாரி கோவைக்கு திம்பம் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை வந்துகொண்டிருந்தது. மலைப் பாதையில் 26 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச் சுவா் மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பரமேஸ்வரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூா் போலீஸாா் சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


