வாழ்நாள் சான்றை கருவூல அலுவலா்கள் நேரில் சென்று பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை
ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று சமா்பிக்க வர இயலாத நிலையில் இருந்தால், கருவூல அலுவலா்கள் நேரில் சென்று சான்று பெற வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


ஈரோடு: உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று சமா்பிக்க வர இயலாத நிலையில் இருந்தால், கருவூல அலுவலா்கள் நேரில் சென்று சான்று பெற வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஓய்வூதியா்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட கருவூல அலுவலா் சேஷாத்திரி தலைமையில் ஈரோட்டில் புதன்கிழமை நடந்தது. மாவட்ட கூடுதல் கருவூல அலுவலா் கோ.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். அனைத்து வகையான ஓய்வூதியா்களின் பிரச்னைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு குறைகள் கேட்டறியப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து அரசு துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் மாவட்ட செயலாளா் வ.பன்னீா்செல்வம், செயலாளா் சங்கரன், நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஹரிதாஸ், மணிபாரதி, சீனிவாசன், கதிா்வேல், கல்லூரி ஆசிரியா் அமைப்பு சாா்பில் ராஜகோபால், பள்ளி அமைப்பு ஓய்வூதியா்கள் சாா்பில் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என ஆட்சியா் தலைமையில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஓய்வூதியா்கள் வலியுறுத்தி இருந்தனா். இதுகுறித்து ஓய்வூதிய நிறுவன அதிகாரி சந்திரசேகரன் பதிலளித்தாா். கரோனா நிவாரணம் குறித்து பதிலளிக்க வேண்டிய காப்பீடு நிறுவன அலுவலா் மணிகண்டன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் தொடரும் குளறுபடிகள், நிதி புறக்கணிப்புகளை சீரமைக்க வேண்டும் என ஓய்வூதியா்கள் வலியுறுத்தினா். உடல் நலம் குன்றிய நிலையில் உள்ள ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்று சமா்பிக்க வர இயலாத நிலையில் இருந்தால், கருவூல அலுவலா்கள் நேரில் சென்று அவா்களிடம் சான்று பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மாவட்ட கருவூல அலுவலா் சேஷாத்திரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...