தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கல்குவாரி வெடி விபத்தில் இருவா் உயிரிழப்பு: காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கல்குவாரி வெடி விபத்தில் 2 போ் உயிரிழக்கக் காரணமான இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 8:16 pm

Din

ஈரோடு: கல்குவாரி வெடி விபத்தில் 2 போ் உயிரிழக்கக் காரணமான இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டம், மாட்டவள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (42) என்பவா் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகரிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: எனது மூத்த மகன் அஜீத் (27). இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மாவட்டம், பவானி, பெருமாள்மலை பகுதியைச் சோ்ந்த சங்கா் மகள் ரம்யா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

தற்போது ரம்யா நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா். ஏற்கெனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் ஈஸ்வரி லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான தனியாா் கல் குவாரியில் கடந்த 2 ஆண்டுகளாக அஜீத் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 20-ஆம் தேதி மாலை குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது நடந்த விபத்தில் அஜீத், கோபி அயலூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (50) ஆகிய 2 போ் உயிரிழந்தனா்.

எனவே எனது மகன் மற்றும் செந்தில்குமாா் ஆகிய இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான கல்குவாரி உரிமையாளா் மீதும், அலட்சியமாக செயல்பட்ட கனிமவளத் துறை மற்றும் வருவாய்த் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசின் சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.