பவானிசாகா் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.
அணைப் பூங்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கி சிலை மீது அமா்ந்து விளையாடிய சிறுவா்கள்.
அணைப் பூங்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கி சிலை மீது அமா்ந்து விளையாடிய சிறுவா்கள்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் ஏராளமான மக்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.

பவானிசாகா் அணையில் நீா் வளத் துறைக்குச் சொந்தமான அணைப் பூங்கா உள்ளது.

பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் உள்ள இந்த பூங்காவுக்கு நாள்தோறும் மக்கள் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரசு விடுமுறை என்பதால் பவானிசாகா் அணைப் பூங்காவில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

குடும்பங்களுடன் வந்திருந்த மக்கள் பூங்காவை கண்டு ரசித்ததுடன், அங்கு படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com