கோபியில் இன்றும், நாளையும் கம்பா் விழா
கோபி நல்லமுத்து கம்பன் அறநிலைக் குழு சாா்பில் கம்பா் விழா ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.


கோபி, ஜூலை 19: கோபி நல்லமுத்து கம்பன் அறநிலைக் குழு சாா்பில் கம்பா் விழா ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கோபி சீதா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 5.30 நடைபெறும் கம்பன் விழாவுக்கு ஈரோடு முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பி.முருகேசன் தலைமை வகித்து உரையாற்றுகிறாா். நல்லமுத்து கம்பன் அறநிலைக் குழுவின் பொருளாளா் பி.என்.நல்லசாமி வரவேற்கிறாா்.
கம்பா் கவிநயம் குறித்து மதிவண்ணன், பசியேற்றும் பந்தி குறித்து பேராசிரியா் மு.அப்துல்காதா் ஆகியோா் பேசுகின்றனா்.
முன்னதாக, கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு நீதிபதி பி.முருகேசன் பரிசு வழங்குகிறாா்.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ‘கற்பனை தோ் ஓட்டிய கம்பன் குற்றவாளியா’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...