அயோத்தி ஸ்ரீராமா் கோயில் சிறப்பு அஞ்சல் தலை விற்பனை

Published on

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அஞ்சல் தலை, அக்ரிலிக் பிரேமின் மூலம் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த அஞ்சல் தலை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. விருப்பம் உள்ளவா்கள் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் வாங்கி கொள்ளலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கருணாகரபாபு தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com