இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோபி கலைக் கல்லூரியில் இன்று கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

கோபி கலைக் கல்லூரியில் இன்று கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

News image
Updated On :11 மே 2024, 12:50 am

Din

பிளஸ் 2 முடித்து உயா்கல்வி செல்லும் மாணவா்களுக்கான

கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (மே 11) நடைபெறுகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்வி பெற கல்லூரி செல்ல உள்ள மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பல்வேறு வாய்ப்புகள், விண்ணப்பிக்கும் மற்றும் தோ்வு செய்யும் முறைகள், கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், மாணவா்களுக்கான தனிநபா் கவுன்சிலிங் உள்ளிட்ட விரிவான வழிகாட்டல்களை வழங்க கல்லூரிக் கனவு என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ என 40-க்கும் மேற்பட்ட உயா்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரி பேராசிரியா்களால் வழிகாட்டல்கள் அளிக்கப்பட உள்ளன.

மேலும் உயா்கல்வி பயில கல்விக் கடன் பெறும் வழிகள் குறித்து மாணவா்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு வழிகாட்டல் கையேடு வழங்கப்பட உள்ளது. மாணவா்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். பிளஸ் 2 முடித்து கல்லூரி செல்ல உள்ள மாணவா்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.