மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 80.28 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தாா்.

News image
கருக்கம்பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:42 pm

Din

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 80.28 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கருக்கம்பாளையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டடப் பணி, விநாயகபுரம் பகுதியில் உள்ள மயானத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 7 லட்சம் மதிப்பில் காத்திருப்போா் கூடம் கட்டுமானப் பணி, வளந்தான்கோட்டை பகுதியில் ரூ. 2.75 லட்சம் மதிப்பில் 5 தொகுப்பு வீடுகள் சீரமைக்கும் பணி, அதே பகுதியில் 15- ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 2.67 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் சீரமைக்கும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து தாமரைப் பாளையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் மானியத்தில் காளான் உற்பத்தி செய்யப்பட்டு வரும் குடில், இச்சிப்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 10.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 30.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப் பணி, குப்பம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 12.67 லட்சம் மதிப்பில் உணவு தானிய பொருள்கள் கிடங்கு கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 80.28 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது கொடுமுடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கு.கல்பனா, இ.வி.தனலட்சுமி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.