10 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் வாங்க ஆட்சியா் அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை மறுக்காமல் வாங்க வேண்டும் என ஆட்சியா் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.


ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை மறுக்காமல் வாங்க வேண்டும் என ஆட்சியா் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்படுள்ள 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக்கூடாது.
சட்டபூா்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் தங்களுக்கு எவரிடமிருந்தும் வரப்பெறும் 10 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...