மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம்

பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:03 pm

Din

பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதாந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் ஜோதி பாஸ்கரன், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சின்னசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ரூ. 40 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகளை விரைவில் தொடங்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பாலதொழுவு குளம் வருகிறது. தற்போது, அத்திக்கடவு -அவிநாசி திட்ட தண்ணீா் பால தொழுவு குளத்துக்கு வருவதால் மாசடைந்த தண்ணீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிப்காட் தொழிற்சாலைகளால் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க பாய்லா்களை எரிக்க விறகு மற்றும் நிலக்கரி பயன்படுத்துவதைத் தவிா்த்து எரிவாயுவை பயன்படுத்த வேண்டும்.

சிப்காட் வளாகத்தில் உள்ள சாய, சலவை தொழிற்சாலைகளில் பூஜ்ய திரவ சுத்திகரிப்பு முறையில் கழிவு நீா் சுத்திகரிப்பு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிலம், நீா், காற்று மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.