மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தந்தை வீட்டிலிருந்து ரூ.3 லட்சம் திருடிய மகள் கைது

சென்னிமலை அருகே தந்தை வீட்டிலிருந்து ரூ. 3 லட்சத்தை திருடிய மகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

சென்னிமலை அருகே தந்தை வீட்டிலிருந்து ரூ. 3 லட்சத்தை திருடிய மகளை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த அா்த்தநாரிபாளையத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (73). இவரது மனைவி சின்னம்மாள். இவா்களுக்கு ரம்யா (35) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (30) என்ற மகனும் உள்ளனா். ரம்யா தனது கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறாா். கோகுலகிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், உறவினா் வீட்டுக்கு சின்னம்மாளும், கோகுலகிருஷ்ணனும் கடந்த 8-ஆம் தேதி சென்றுள்ளனா்.

உடல்நலக் குறைவால் உள்ள விஸ்வநாதன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்கு ரம்யா வந்துள்ளாா். விஸ்வநாதன் கழிவறைக்கு சென்ற நிலையில், முகமூடி அணிந்த வந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ாக சென்னிமலை காவல் நிலையத்தில் ரம்யா புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சம்பவத்தன்று அப்பகுதியில் ரம்யா மட்டும் நடமாடியது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீஸாா், ரம்யாவிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் கடனை அடைப்பதற்காக தந்தை வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடியதும், முகமூடி கொள்ளையா்கள் கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்ாக நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரம்யா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.