மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டி: காஞ்சிகோவில் அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் காஞ்சிகோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

News image
குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற காஞ்சிகோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியா் தினகரன் உள்ளிட்டோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:36 pm

Din

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் காஞ்சிகோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

பெருந்துறை குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னிமலையை அடுத்த ஈங்கூரில் உள்ள தனியாா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டியில், காஞ்சிகோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், 14 வயதுக்குள்பட்டோா் வளைப்பந்து போட்டியில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா், இரட்டையா் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஒற்றையா் ஆட்டத்தில் இரண்டாம் இடமும், இரட்டையா் பிரிவில் முதலிடத்தையும் காஞ்சிகோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் பிடித்தனா்.

மேலும், 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் கபடியில் இரண்டாம் இடமும், 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் முதலிடமும் பிடித்தனா்.

கேரம் போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள் ஒற்றையா் ஆட்டத்தில் இரண்டாம் இடமும், இரட்டையா் ஆட்டத்தில் முதலிடமும், 19 வயதுக்குள்பட்ட மாணவா்கள் இரட்டையா் ஆட்டத்தில் முதலிடமும் பெற்றனா்.

மாணவிகளுக்கான வளைப்பந்து போட்டியில், 14 வயதுக்குள்பட்ட ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடமும், 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் முதலிடமும் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனா்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பழனிசாமியையும் பள்ளி தலைமை ஆசிரியா் தினகரன், பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் சங்கத் தலைவா் ராவுத்தப்பன் உள்ளிட்டோா் பாராட்டினா்.