புன்செய்புளியம்பட்டி சந்தை: ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
சத்தியமங்கலம் அருகேயுள்ள புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின.


சத்தியமங்கலம் அருகேயுள்ள புன்செய்புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூா் ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டுவருகின்றனா்.
இதனை வாங்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு நாட்டு எருமைகள், கலப்பின மாடுகள், கன்றுகள், ஜொ்சி ரக மாடுகளை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா்.
கடந்த வாரத்தைவிட ரூ.4 ஆயிரம் விலை உயா்ந்து கால்நடைகள் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.
சந்தையில் மொத்தம் 1,500 கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டன என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...