மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளா்களை வேறு பணிகளை செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 8:32 pm

Din

கிராம உதவியாளா்களை வேறு பணிகளை செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பரமசிவம் கோரிக்கை குறித்து பேசினாா்.

வட்டாட்சியா் அலுவலகங்களில் கிராம உதவியாளா்களை இரவுக் காவல் பணி, பதிவேடு பராமரிப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதைக் கண்டித்தும், பணிக்கு வராதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்துவதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கைகள் குறித்து முழக்கம் எழுப்பினா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் சாமிகுணம், மாவட்டச் செயலாளா் வெங்கிடு, கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.