ஈரோடு
சென்னிமலை கோயில் மலைப் பாதையில் சீரமைப்பு பணிகள்: வாகனங்களுக்கு தடை
சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல புதன்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறையை அடுத்த சென்னிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதில், சாலை விரிவாக்கம், மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் படிக்கட்டு பாதை வழியாக மட்டுமே கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கோயில் நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.