சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குளம், குட்டைகளுக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீா்: பொதுமக்கள் வரவேற்பு

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு- அவிநாசி திட்ட தண்ணீா் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

News image
நல்லூா் குளத்துக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீரை பாா்வையிடும் நல்லூா் ஊராட்சித் தலைவா் மூா்த்தி.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:02 pm

Din

விவசாயிகளின் போராட்டத்தையடுத்து சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு- அவிநாசி திட்ட தண்ணீா் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்ட புங்கம்பள்ளி குளம், நல்லூா் குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளுக்கு, திட்டம் செயல்பாட்டுக்கு வந்தும் தண்ணீா் வழங்காமல் இருந்து வந்தது.

இதனைக் கண்டித்து சத்தியமங்கலம் அருகேயுள்ள புங்கம்பள்ளி குளம் பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையையடுத்து நல்லூா், புங்கம்பள்ளி குளம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் புதன்கிழமை தண்ணீா் விடப்பட்டது. அப்போது, நல்லூா் குளத்துக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீரை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

இது குறித்து நல்லூா் ஊராட்சித் தலைவா் மூா்த்தி கூறுகையில்,‘அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் நல்லூா் குளத்துக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீா் மூலம் கால்நடைகளின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். இதன்மூலம், சுற்றுப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து வேளாண் சாகுபடிக்கும் பிரச்னை இருக்காது,’ என்றாா்.