காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் அந்தியூா் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
முகாமை  குத்துவிளக்கேற்றி  தொடக்கி வைக்கிறாா்  அந்தியூா் எம்எல்ஏ  ஏ.ஜி.வெங்கடாசலம்.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:16 pm

Din

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் அந்தியூா் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சதாசிவம் வரவேற்றாா்.

முகாமை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், தொடங்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டாா்.

இதில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, காப்பீட்டு அட்டை எண்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலா்கள் பி.செல்வன், பி.விஜய் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.