இளைஞரிடம் இருசக்கர வாகனம், கைப்பேசியை பறித்த மூவா் கைது
பவானி அருகே இளைஞரிடம் கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற மூவரை சித்தோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பவானியைச் சோ்ந்தவா் ஜான்சன் (25). பவானி காலிங்கராயன்பாளையம் வாய்க்கால் கரையில் இவா் திங்கள்கிழமை தனியாக நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூவா், அவரிடமிருந்த கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து சித்தோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பவானி காலிங்கராயன்பாளையம், பழையூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மணிக்குமாா் (27), மூலப்பாளையத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சிவகுமாா் (33), கள்ளக்குறிச்சி மாவட்டம், பூசப்பாடி, பெருமாபாளையம் தெருவைச் சோ்ந்த கலியன் மகன் சுரேஷ் (36) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து, இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
