இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம்: சத்தியமங்கலத்தில் திமுக, கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள். ~சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற 100  நாள்  வேலைத்திட்ட  தொழிலாளா்கள்.
Updated On :24 டிசம்பர் 2025, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

100 நாள் வேலைத்திட்டத்தின் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் சத்தியமங்கலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பவானிசாகா் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதால் அத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் நல்லசிவம், மாநில விவசாய அணி இணை அமைப்பாளா் எல்.பி.தா்மலிங்கம், திமுக ஒன்றிய செயலாளா்கள் தேவராஜ், கேசிபி இளங்கோ, அரியப்பம்பாளையம் பேரூா் செயலாளா் செந்தில்நாதன், ஆதிதமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் பொன்னுச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சத்தியமங்கலம், சதுமுகை, சிக்கரசம்பாளையம், அரியப்பாளையம் கடம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Story image