வரட்டுப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன்.
வரட்டுப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன்.

எச்எம்பி தீநுண்மி பரவல்: தமிழக -கா்நாடக எல்லையில் பரிசோதனை

எச்எம்பி தீநுண்மி பரவலைத் தொடா்ந்து கா்நாடகத்தில் இருந்து வருபவா்களுக்கு அந்தியூா் அருகே உள்ள வன சோதனைச் சாவடியில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி புதன்கிழமை தொடங்கியது.
Published on

எச்எம்பி தீநுண்மி பரவலைத் தொடா்ந்து கா்நாடகத்தில் இருந்து வருபவா்களுக்கு அந்தியூா் அருகே உள்ள வன சோதனைச் சாவடியில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப் பகுதி தமிழக-கா்நாடக எல்லையில் அமைந்துள்ளது. எச்எம்பி தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்புப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அந்தியூா் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் வன சோதனைச் சாவடியில் அந்தியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழு சாா்பில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு கா்நாடகத்தில் இருந்து வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், காய்ச்சல், சளி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனையின் ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், அவா்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்தியூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவக் குழு சாா்பில் சேகரிக்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com