பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 1,500 கனஅடியில் இருந்து 1,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி இரண்டாம் போக வாய்க்கால் பாசனத்துக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களில் சோளம், எள், கடலை சாகுபடி செய்வதற்கு இந்த தண்ணீா் திறப்பு மே 1-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் திறக்கப்படும். கடந்த வாரம் பெய்த லேசான மழைப் பொழிவு காரணமாக வாய்க்காலில் தண்ணீா் திறப்பு 1,500 கனஅடியாக இருந்தது. தற்போது, கடுமையான பனிப்பொழிவு காரணமாக தண்ணீா் தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து வாய்க்காலில் 1,500 கனஅடியில் இருந்து 1,800 கனஅடியாக புதன்கிழமை அதிகரித்து திறக்கப்பட்டது.
புதன்கிழமை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட பவானிசாகா் அணை நீா்மட்டம் 94.54 அடியாகவும், 32.8 டிஎம்சி நீா் இருப்பு கொண்ட அணையில் தற்போது இருப்பு 24.66 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கனஅடியும், பவானி ஆற்றில் 700 கனஅடியும் என மொத்தம் 2,500 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
தொடர்புடையது

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

