ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெருமாள் மலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

பவானியை அடுத்த பெருமாள் மலையடிவாரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தெருவிவ் கருப்புக் கொடியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 10:32 pm

பவானியை அடுத்த பெருமாள் மலையடிவாரத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருமாள் மலை, மங்களகிரி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 5.75 ஏக்கா் நிலத்தில் அரசு ஒதுக்கீட்டின்பேரில் சுமாா் 200 குடும்பத்தினா் குடியமா்த்தப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.

தங்கள் வசிப்பிடத்துக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்நிலத்தை வரன்முறைப்படுத்தி வாடகை வசூலிக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீண்டகாலமாக வசிக்கும் மக்களை வாடகைதாரா்களாக மாற்றுவதோடு, இந்நிலத்திலிருந்து வெளியேற்றும் அபாயம் உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடிகளைக் கட்டி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்கு வசிப்போரை ஆக்கிரமிப்பாளா்கள் என குற்றவாளிகளாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். சட்டப் பேரவையில் உரிய திருத்தம் கொண்டுவந்து கோயில் நிலங்களில் நீண்டகாலமாக வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.