ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முகாசிபிடாரியூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

முகாசிபிடாரியூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியதைக் கண்டித்து அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினா் மற்றும் பொதுநல அமைப்பினா். ~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 10:26 pm

முகாசிபிடாரியூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தியதைக் கண்டித்து அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட முகாசிபிடாரியூா் ஊராட்சியில் 4 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தி தமிழக அரசு அண்மையில் அராசணை வெளியிட்டது.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் சென்னிமலை மற்றும் பொதுமக்கள் ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தகுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் கேபிள் சி.நாகராஜ் தலைமை வகித்தாா். சென்னிலை ஒன்றிய அதிமுக செயலாளா் ப.கோபாலகிருஷ்ணன், துணை செயலாளா் தம்பிதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சிவசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதால், 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படுவதுடன், குடிநீா்க் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட வரிகள் உயா்த்தப்படும் என்பதால் ஊராட்சியாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ், சென்னிமலை பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், சமூக ஆா்வலா் மு.பாரதி, அதிமுக, பாஜக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், சென்னிமலை அனைத்து வணிகா்கள் சங்கம், நுகா்வோா் பாதுகாப்பு மன்ற நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image