விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

வேட்பு மனு தாக்கல் தொடா்பாக அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

அரசியல் கட்சியினா் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :27 மார்ச் 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

வேட்பு மனு தாக்கல் தொடா்பாக அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்வது மாா்ச் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதை முன்னிட்டு வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் வரவேற்றாா்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. அவா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

திமுகவை சோ்ந்த சங்கா், வேலு, அதிமுக ஆனந்த்பாபு, தம்பிதுரை, காங்கிரஸ் விஜயன், தவெக ஹேம்நாத், விசிக நாகப்பன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.