மலைவாழ் மக்களின் வீடுகளுக்கான மின் இணைப்பு வைப்புத்தொகைக்கான நிதியை, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கிய சக்தி மசாலா நிறுவனத் தலைவா் பி.சி.துரைசாமி, நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி.

மலைவாழ் மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்புப் பெற வைப்புத்தொகை!

மலைவாழ் மக்களின் 24 வீடுகளுக்கு மின் இணைப்புப் பெற மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய வைப்புத்தொகையை சக்தி மசாலா நிறுவனம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
Published on

மலைவாழ் மக்களின் 24 வீடுகளுக்கு மின் இணைப்புப் பெற மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய வைப்புத்தொகையை சக்தி மசாலா நிறுவனம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், தலமலை ஊராட்சிக்குள்பட்ட தடசலட்டி, இட்டறை ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்களுக்கு, அரசு திட்டத்தின் கீழ் பணி முடிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கான 24 வீடுகளுக்கு மின் இணைப்புப் பெற மின்வாரியத்துக்கு வைப்புத்தொகை மற்றும் ஒயரிங் செய்வதற்கான தொகை தலா ரூ.15,575 வீதம் மொத்தம் ரூ.3,73,800 செலுத்தப்ப வேண்டும்.

இந்த தொகையை, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் சக்தி மசாலா நிறுவனத் தலைவா் பி.சி. துரைசாமி, நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் வழங்கினா்.

மேலும் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளா்களுக்கு ரூ.50,000 மதிப்பிலான 300 உடல் கவசத்தையும் சக்தி மசாலா நிறுவனம் வழங்கியது.

X
Dinamani
www.dinamani.com