அந்தியூா் அருகே வெள்ளிக்கிழமை கூலி தொழிலாளி வசிக்கும் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.
அந்தியூா் அருகே வெள்ளிக்கிழமை கூலி தொழிலாளி வசிக்கும் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினா்.

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை சேதம்

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

அந்தியூா் அருகே தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பொரசக்காட்டூரைச் சோ்ந்தவா் நாராயணன் (45). கூலித் தொழிலாளி. குடும்பத்துடன் குடிசையில் வசித்து வரும் இவா், சுவாமி முன்பாக அகல் விளக்கேற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துவிட்டு வெளியே சென்றுள்ளாா். மாலையில் வீட்டின் கூரையில் இருந்து கரும்புகை வந்ததைக் கண்டு, அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா்.

ஆனால், தீ மள மளவென பிற பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அந்தியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராபா்ட் தலைமையிலான தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

இருப்பினும், குடிசை முற்றிலும் எரிந்து சேதமானதோடு வீட்டிலிருந்த உடமைகள், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள், ரூ.29 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் தீயில் சாம்பலாகின.

இதுதொடா்பாக அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com