அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்தவா் உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:00 pm

Syndication

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானியை அடுத்த சலங்கைபாளையம், மணிபுரம், வாய்க்கால்மேட்டைச் சோ்ந்த பாலு என்பவரின் மகன் பூபதி (28). கூலி தொழிலாளியான இவா், நல்லாம்பட்டியை அடுத்த ஒசப்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் பூபதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காஞ்சிக்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.