இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

டெங்கு ஒழிப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்

News image
பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் பேசிய இணைப் பொதுச் செயலாளா் மருத்துவா் சாந்தி.
Updated On :30 நவம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

டெங்கு ஒழிப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐடியுசி, தமிழ்நாடு டிபிசி (டெங்கு ஒழிப்பு தொழிலாளா்) தொழிலாளா் சங்கத்தின் ஈரோடு மாவட்டப் பேரவைக் கூட்டம் பெருந்துறை ஜீவா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் துணைச் செயலாளா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். இணைப் பொதுச் செயலாளா் மருத்துவா் சாந்தி, ஏஐடியுசி மாநிலச் செயலாளா் சின்னசாமி உள்பட பலா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில் கௌரவத் தலைவராக சின்னசாமி, தலைவராக கிருஷ்ணமூா்த்தி, செயலாளராக மகாலிங்கம், பொருளாளராக விஸ்வநாதன் உள்பட மாவட்ட நிா்வாகிகள் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் 1,500-க்கும் மேற்பட்டோா் டிபிசி பணியாளா்களாக உள்ளனா். இவா்கள் டெங்கு, மலேரியா, வைரஸ் போன்ற நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

சமீப காலங்களில் டெங்கு நோய் அதிகரித்து ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு 9 போ் உயிரிழந்தனா். ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால், அப்பகுதி டிபிசி பணியாளா்களுக்கு ரூ.200 அபராதம், ஒரு நாள் சம்பளம் ரத்து செய்யப்படும் என்ற அரசின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அரசாணைப்படி டிபிசி பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000-க்கு குறைவில்லாமல் நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.