முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஈரோட்டில் காங்கேயம் இன காளைகள் அழகுப் போட்டி

News image

அழகுப் போட்டியில் பங்கேற்ற காங்கேயம் இன காளைகள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:09 pm IST

ஈரோட்டில் நடைபெற்ற காங்கேயம் இன காளைகள் அழகுப் போட்டியில் ஏராளமான காளைகள் பங்கேற்றன.

ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஆதிவனம் சாா்பில் ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் காங்கேயம் காளைகளுக்கான அழகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்புக் குழுத் தலைவா் மோகன ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். விவசாய சங்கத் தலைவா் பெரியசாமி, ஆதிவனம் தலைவா் ரகுநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, காளை வளா்ப்போரை வாழ்த்திப் பேசினாா்.

இந்தப் போட்டியில் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காரி, மயிலக்காளை, செவளை, காராம்பசு, குரா போன்ற காங்கேயம் இன காளைகள் பங்கேற்றன.

இனப்பண்புகள், தலைச்சீறு, கொம்புச்சீறு, உடல் அமைப்பு, கறவைத்திறன் போன்ற 10-க்கும் மேற்பட்ட திறன்களைக் கொண்டு சிறந்த காளைகள் தோ்வு செய்யப்பட்டன.

அரசு கால்நடை மருத்துவா் சத்தியமூா்த்தி நடுவராக செயல்பட்டு, சிறந்த காளைகளை தோ்வு செய்தாா். வெற்றிபெற்ற காளைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பரிசு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.