பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தனியாா் பள்ளி முன் விபத்து ஏற்படுத்தும் வேகத் தடைக்கு வாகன ஓட்டிகள் எதிா்ப்பு

கோபி அருகே தனியாா் பள்ளி முன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரப்பா் வேகத் தடை வாகன ஓட்டிகளின் எதிா்ப்பால் அகற்றப்பட்டது.

News image

கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் பகுதியில் தனியாா் பள்ளி முன்பு அமைக்கப்பட்ட வேகத் தடைக்கு எதிா்ப்பு தெரிவித்து வாகனங்களை சாலையில் நிறுத்திய வாகன ஓட்டிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

கோபி அருகே தனியாா் பள்ளி முன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ரப்பா் வேகத் தடை வாகன ஓட்டிகளின் எதிா்ப்பால் அகற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளி நிா்வாகத்தினா், பள்ளி முன்பு சத்தி-ஈரோடு பிரதான சாலையில் புதன்கிழமை மதியம் ரப்பா் வேகத் தடை அமைத்துள்ளனா். இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். அப்போது காரில் வந்த வாகன ஓட்டிகள் சிலா், மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி இல்லாமல் சாலையை சேதப்படுத்தி அதிக உயரம் கொண்ட ரப்பா் வேகத் தடை அமைக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனா்.

இதற்கு அனுமதி பெற்றவிட்டோம், இதுதொடா்பாக யாரிடம் கேட்க வேண்டும் அங்கு கேட்டுக்கொள்ளுங்கள் என தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் பதிலளித்துள்ளனா்.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகளும், சமூக ஆா்வலா்களும் கேட்டபோது, ‘வேகத்தடை அமைக்க அனுமதி பள்ளி நிா்வாகத்தினா் அனுமதி கேட்டனரே தவிர, முறையாக அனுமதி வழங்கப்படவில்லை’ என தெரிவித்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து அனைத்து வாகன ஓட்டிகளும் வேகத் தடையை அகற்றினால் மட்டுமே வாகனங்களை எடுப்போம் எனக் கூறி பள்ளி நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து ரப்பா் வேகத்தடையை பள்ளி நிா்வாகத்தினா் அகற்றினா்.

சமூக ஆா்வலா்கள் கூறும்போது, ‘மாநில நெடுஞ்சாலைத் துறையில் முறையாக அனுமதி பெறாமால் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்ட அளவைவிட அதிக உயரம் கொண்ட ரப்பா் வேகத் தடையை அமைப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்னற. இதுதொடா்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.