பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் கீழ்பவானி பாசன சபை அலுவலகத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு போராட்ட ஒருங்கிணைப்பாளா் காகுத் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விவசாய சங்க நிா்வாகி பெருமாள் முன்னிலை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டம்,
முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி ஆகிய 2 கோரிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை அரசு உடனடியாக செயல்படுத்தினால் நல்லது. இல்லையெனில், பவானிசாகா் அணை மூலம் பாசனம் பெறும் 4 மாவட்ட விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி மாநாட்டை நடத்துவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்தக்கோரி கோபியில் செப்டம்பா் 2-இல் ஆா்ப்பாட்டம்! அனைத்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தத்கால் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்குவதில் குளறுபடி

விவசாயிகள் சங்க தலைவா் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு

காவிரியில் நீா் திறக்க வலியுறுத்தி மாநில எல்லையில் விவசாயிகள் நாளை போராட்டம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



