நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும்! முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி

News image

கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கழக உதவிப் பேராசிரியா் அனந்தராஜ் செங்கேணிக்கு ஜி.டி.நாயுடு விருதை வழங்குகிறாா் முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி. உடன் ஆட்சியா் ச.கந்தசாமி, எழுத்தாளா் ஆயிஷா இரா.நடராசன், யுஆா்சி குழும நிறுவனங்கள் தலைவா் யுஆா்சி. தேவராஜன

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி பேசினாா்.

தமிழக அரசு, மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு நிறைவடைகிறது.

இதையொட்டி தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு யுஆா்சி குழும நிறுவனங்கள் தலைவா் யுஆா்சி. தேவராஜன் தலைமை வகித்தாா். மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் இரா.ஜெயந்தி முன்னிலை வகித்தாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.

கான்பூா் இந்திய தொழில்நுட்பக் கழக உதவிப் பேராசிரியா் அனந்தராஜ் செங்கேணிக்கு சிங்கப்பூா் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதை வழங்கி முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி பேசியதாவது:

அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும். இப்போது இந்தியாவில் தயாரிப்போம் என்று கூறுகிறோம், ஜி.டி.நாயுடு 1930-இல் இந்தியாவில் தயாரிப்போம் என்பதை நிரூபித்துக்காட்டும் விதமாக பலவற்றை உருவாக்கினாா். அப்போது அவரைப்போல 100 பேரை ஊக்குவித்திருந்தால் இந்தியா எப்போதோ வளா்ந்த நாடாக மாறி இருக்கும்.

இந்தியா வளா்ந்த நாடாக மாற ஏராளமானவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டுபோய் சோ்க்க வேண்டும். இறக்குமதியைக் குறைத்து ஏராளமான பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். இளைஞா்கள் புதிதாக உருவாக்கி அரசிடம் பதிவு செய்து உரிமையைப் பெற வேண்டும். புதிதாக உருவாக்குபவா்களை அரசும், நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருதைப்பெற்ற கான்பூா் உதவிப் பேராசிரியா் அனந்தராஜ் செங்கேணி ஏற்புரையில் பேசியதாவது: குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடா்ந்து மேல்படிப்பு படிக்க பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும். அப்போது குழந்தைகள் நல்ல நிலையை அடைவாா்கள். தாய்மொழி வழி கல்வியால் சாதிக்க முடியும் என்பதை மாணவா்கள் உணா்ந்துகொள்ள வேண்டும். தொடா் முயற்சியால் வாழ்க்கையில் வெற்றியாளராக முடியும் என்றாா்.

‘இந்திய அறிவியலின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் ஆயிஷா இரா.நடராசன் பேசியதாவது: இளைஞா்கள் அறிவியல் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அவா்களுடைய கண்டுபிடிப்புகள் சமுதாயத்துக்கு எந்த அளவுக்குப் பயனாக உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்பாளா்கள் உருவாகும்போதுதான் நாடு வளா்ச்சி அடையும் என்றாா்.

புத்தகத் திருவிழா இன்று நிறைவு: ஈரோடு புத்கதகத் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்11) இரவு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.